இத்தனை வருஷம் கழித்து.. பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக பெண் நீதிபதி நியமனம்! | Ayesha Malik Becomes First Woman Judge Of Pakistan Supreme Court

Estimated read time 1 min read

 

India

oi-Logi

 

லாகூர்: பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளாா். பாகிஸ்தானின் நீதித் துறை வரலாற்றில் உச்சநீதிமன்றத்துக்கு பெண் நீதிபதி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

55 வயதான ஆயிஷா மாலிக், ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, முன்னணி கார்ப்பரேட் மற்றும் சட்ட ஆலோசனை மையம் நடத்தி வந்தார். அதன்பிறகு 20 ஆண்டுகள் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டுவந்தார். சொத்துக் குவிப்பு மற்றும், விவாசாயிகள் பிரச்சனையில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் ஆயிஷா மாலிக்.

கொரோனா மட்டுமில்லங்க.. மனித குலத்திற்கு பல சிக்கல் இருக்கு.. ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கைகொரோனா மட்டுமில்லங்க.. மனித குலத்திற்கு பல சிக்கல் இருக்கு.. ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை

 ஆயிஷா மாலிக்

ஆயிஷா மாலிக்

பாகிஸ்தான் நீதித்துறை இதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் 177-ஆவது பிரிவின்படி, லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஆயிஷா மாலிக்கை, பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.

 நீதிபதி

நீதிபதி

இதற்கான நியமனத்தில் அதிபா் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளாா்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு பாகிஸ்தான் நீதித் துறை ஆணையம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான நாடாளுமன்றக் குழு இரு தினங்களுக்கு முன் இதை பரிசீலித்தது.

தேர்வு

தேர்வு

லாகூா் உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தேர்வில் நான்காவது இடத்தில் இருந்தார் ஆயிஷா மாலிக். ஆனாலும், பணி மூப்பைக் கருத்தில் கொள்ளாமல் ஆயிஷா மாலிக்கைத் தோ்வு செய்து, அதிபரின் ஒப்புதலுக்கு அந்தக் குழு அனுப்பி வைத்தது. அதைத் தொடா்ந்து, ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

 பதவியேற்பு

பதவியேற்பு

லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுகிறார். பாகிஸ்தானின் சட்ட கமிஷன் நேற்று இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் பதவியேற்கிறார்.

English summary

For the first time in the history of Pakistan, woman has been appointed as Supreme Court judge

Story first published: Saturday, January 22, 2022, 17:19 [IST]

நன்றி

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours