மும்பை:
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours