திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பாலத்தின் அடியில் தண்ணீரில் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்க சென்ற போது குடிபோதை நபர் நீந்திக் கொண்டே வெளியே வந்த சம்பவம் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை அடுத்து தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர பிற சேவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இருந்தும் சில இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த குடிமகன் காவல்துறையினரை மட்டுமல்லாது பொதுமக்களையும் திடீர் அச்சத்தில் ஏற்படுத்திய சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது.
குடிகாரரின் சேட்டை
திண்டுக்கல் மாவட்டம் திருச்சி சாலையில் சீலப்பாடி பகுதியில் உள்ள ஓடை பாலத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக திண்டுக்கல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஓடை பாலத்திற்கு இடையே கிடந்த சடலத்தை மீட்க முயற்சித்தனர் அப்போதுதான் யாரும் எதிர்பாராதவிதமாக அந்த சடலமே நீந்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர்தான் அது சடலம் இல்லை அது கள்ளச்சந்தையில் மது குடித்த குடிகாரரின் சேட்டை என்பது.
கள்ளச்சந்தையில் மது
திண்டுக்கல் மாவட்டம் ஆலத்தூர் பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல் இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலை ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான அவர் இன்று மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்து சீலபாடி பகுதியில் உள்ள கள்ளச்சந்தையில் மது விற்ற நபர்களிடம் மதுபாட்டில்களை வாங்கி குடித்துவிட்டு அருகே இந்த ஓடை பாலத்தில் அமர்ந்து இருக்கிறார்.
சடலம் என நினைத்த சக குடிகாரர்
போதை தலைக்கேறிய நிலையில் தடுமாறிய முருகவேல் பாலத்திலிருந்து விழுந்துள்ளார். ஆனால் அங்கே தண்ணீர் இருந்ததால் காயம் படவில்லை. இருந்தும் சாலை முழுவதும் தண்ணீர் இருப்பதாக கற்பனையாக நினைத்து கொண்ட முருகவேல்பாலத்தில் நிரம்பி இருந்த தண்ணீரில் நீந்திக் கொண்டே உள்ளே சென்றுள்ளார். பின்னர் வெளியே வர முடியாமல் தவித்த நிலையில் அங்கே கள்ளச்சந்தையில் மது வாங்கி வந்து இருந்த மற்றொரு நபர் பாலத்தின் அடியில் சடலம் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் . இதையடுத்து தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்பதற்காக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறை உடலை மீட்க முயற்சி செய்தபோது அலறிக் கொண்டே முருகவேல் தண்ணீரில் நீந்திக் கொண்டே வெளியே வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிர்ச்சி சம்பவம்
பின்னர் அவரை மீட்ட போலீசார் சட்டைப்பையில் வைத்திருந்த அடையாள அட்டையில் சோதனை செய்த போது தான் அவர் தாடிக்கொம்பு அருகே உள்ள ஆலங்குடியில் சேர்ந்தவர் என்பதும் மில் வேலை பார்ப்பவர் என்பதும் தெரிய வந்ததையடுத்து முருகவேளின் உறவினர்களுக்கு தகவல் அளித்த போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் பாலத்தில் அந்த நபர் இறந்ததாக நினைத்து போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அவர் எழுந்து வந்ததை கண்டதும் சற்றே மிரண்டு தான் போய்விட்டனர்.
+ There are no comments
Add yours