அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ2. 25 லட்சம் மோசடி: பாமக பிரமுகர் கைது..!

Estimated read time 0 min read

தூத்துக்குடி:

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ2. 25 லட்சம் மோசடி செய்ததாக பாமக பிரமுகரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரம் 2வது தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மனைவி விநாயகி (35). மாற்றுத்திறனாளியான இவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக சாத்தான்குளம் அழகம்மன் காலனி தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் அழகுதுரை, கடந்த 4.03.21 அன்று ரூ. 95 ஆயிரம் வாங்கியுள்ளாா்.


அதேபோல் விநாயகியின் நண்பா் சி. லட்சுமணன் என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் வாங்கியுள்ளாா். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த இருவரும் கடந்த 10. 03. 21 அன்று பணத்தை திருப்பிக் கேட்டபோது 100 நாள் அவகாசம் கேட்டுள்ளாா். அதன்பின்னும் பணம் தராமல் காலம் கடத்தி வந்துள்ளாா். இந்நிலையில் இருவரும் அழகுதுரை வீட்டிற்கு வந்து பணத்தை கேட்டுள்ளனா். அப்போது அழகுதுரை அவா்களை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விநாயகி புகாா் செய்தாா். அதன் பேரில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், அழகுதுரை மீது 3 சட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்தாா். காவல் ஆய்வாளா் பாஸ்கரன் விசாரணை நடத்தி அழகுதுரையை வியாழக்கிழமை கைது செய்தாா். அழகுதுரை, பாட்டாளி மக்கள் கட்சியின் சாத்தான்குளம் ஒன்றிய துணைச் செயலராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours