சேலம்:
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இருந்து பொதுமக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து…
தைப்பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய விழாவாகும். இந்த தைத்திருநாள் விழாவிற்காக தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்காக அரசு நியாய விலை கடைகளின் மூலம் 21-பொருட்கள் அடங்கிய இலவச பையை வழங்க உத்தரவிட்டு,தற்போது இந்த பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இருந்து பொதுமக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது நன்றியினையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
“எங்களுக்கு பணம் கொடுத்திருந்தால் கூட இந்த அளவிற்கு மகிழ்ச்சி இருந்திருக்காது. சென்ற ஆட்சியின் போது 2500 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு அதை டாஸ்மாக் மூலம் அபகரித்துக் கொண்டார்கள் ஆனால்,தற்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொடுத்த பொருட்கள் குடும்பத்திற்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.இதனால் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயன்படும் வகையில் சமையல் பொருட்களை கொடுத்துள்ளார்கள்.
இந்த பொருட்களை வைத்து தைத்திருநாள் அன்று பொங்கல் வைத்து கொண்டாடி மகிழப் போகிறோம் இதுவரை நாங்கள் கொண்டாடிய பொங்கல்களிலேயே இந்த பொங்கல்தான் எங்களால் மறக்க முடியாத இனிப்பான பொங்கல். தமிழகத்திற்கு ஸ்டாலின் அவர்கள்தான் மீண்டும் முதல்வராக வேண்டும்.அவருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி.”என்கிறார்கள் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதி பொதுமக்கள்.
+ There are no comments
Add yours