நாசம் பண்ணிட்டானே.. டிரைவர் வீட்டு வாசலில் கதறிய பெண்.. விஷம் குடித்து வீடியோ போட்டு.. ஷாக்..!

Estimated read time 0 min read

தென்காசி:

தற்கொலை செய்து கொள்ள போவதாக, இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது ஐந்தாம்கட்டளை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் செல்வமணி… காலேஜ் முடித்துள்ளார்.. ஆலங்குளத்திலேயே ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தும் வந்திருக்கிறார்.. இவரது நண்பர் சதீஷ்.

காதல்

பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இருவருமே காதலித்து வந்துள்ளனர்.. இப்போது சதீஷ் ஆட்டோ ஓட்டி வருகிறார்.. கடந்த சில மாதங்களாக, காதலர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.. இதற்காக நிறைய இடங்களுக்கு சென்று தனிமையிலும் இருந்து வந்துள்ளனர். ஒருமுறை இவர்கள் தனிமையில் இருந்தபோது, செல்வமணியின் உறவினர் பார்த்துவிட்டார்.. விஷயம் வீட்டிற்கும், ஊருக்கும் தெரியவந்தது.. செல்வமணியை அனைவருமே கண்டித்தனர்..

மகளிர் போலீஸ்

மேலும் இந்த காதல் விவகாரம் தொடர்பாக ஆலங்குளம் மகளிர் ஸ்டேஷனில் செல்வமணியின் குடும்பத்தினர் புகார் தந்தனர்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில் விசாரணையை துவக்கினர்.. ஆனால், போலீஸ் ஸ்டேஷன் வரை விஷயம் சென்றதும், சதீஷ் பயந்துவிட்டார்.. அதனால், செல்வமணியை பார்த்து இவர் யார் என்று தெரியாது என்றும் சொல்லிவிட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வமணி, தன்னுடன் இத்தனை காலம் சதீஷ் பழகியதற்கான ஆதாரங்களான அத்தனை போட்டோக்கள், வீடியோக்கள், மெசேஜ்களை மகளிர் போலீசில் ஒப்படைத்தார்..

திருமணம்

இதையெல்லாம் பார்த்த போலீசாரும் செல்வமணியை கண்டித்துள்ளதாக தெரிகிறது.. ஒருவேளை சதீஷ் மீது புகார் அளிக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் இல்லையென்றால், 2 நாட்களுக்குள் ஊர் பெரியவர்களிடம் பேசி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, திருமணம் செய்து கொள்வது தொடர்பாக பேசுவதற்கு, செல்வமணி நேராக சதீஷின் வீட்டிற்கு சென்றார்… அங்கிருந்த சதீஷின் உறவினர்கள் செல்வமணியை கடுமையாக தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டுள்ளனர்..

தர்ணா

இதனால் செய்வதறியாது தவித்து போன செல்வமணி, சதீஷ் வீட்டின் முன்பேயே உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.. காதல் தோல்வி ஒருபுறம், நியாயம் கிடைக்காத வேதனை மறுபுறம் சேர்ந்ததால், செல்வமணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துவிட்டார்.. விஷம் குடித்துவிட்டு வீடியோவும் பேசி வெளியிட்டுள்ளார்.. இதனிடையே, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செல்வமணியை உறவினர்கள் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. சிகிச்சையும் நடந்து வருகிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours