திமுக அரசை “டெல்லியே” பாராட்டிடுச்சே.. தேனாம்பேட்டையில் நடந்த சிறப்பான நிகழ்வு..!

Estimated read time 1 min read

சென்னை:

கொரோனா தொற்றை ஒழிப்பதில், திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளின் அடிக்கல் நாட்டு விழா நடந்து வருகிறது.. பிரதமர் மோடி இதை காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.. இந்த நிகழ்ச்சியில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

டிஎம்எஸ் வளாகம்

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காலையில் சென்னை வந்தார்.. தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் அவசர 108 கட்டுப்பாட்டு அறை, கோவிட் கட்டளை மையம் (WAR ROOM ) மற்றும் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டார்… அங்குள்ள ஆக்சிஜன் குடோனில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களையும் அவர் பார்வையிட்டார்…

தடுப்பூசி

பிறகு தடுப்பூசி போடும் பணியையும் ஆய்வு செய்த அவர் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தையும் சென்று பார்த்தார். இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இயக்குனர் தேரணி ராஜன் மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.அதனைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் மத்திய அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்..

ஆலோசனை கூட்டம்

பின்னர் தொடர்ச்சியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான மையம் ஆகியவற்றையும் மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார்.. மேலும், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்… இந்த ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது… இதில், சுகாதாரப்பணிகள், நோய் நோய்த்தடுப்பியல் துறை, துணை மருந்து கட்டுப்பாட்டாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

பாராட்டு

இன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டுள்ளார் மத்திய அமைச்சர்.. தமிழக பயணத்தின் போது, ​​சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள PM CARESன் கீழ் நிறுவப்பட்ட கட்டுப்பாட்டு அறைகள், கோவிட் வார் ரூம், 108 கட்டுப்பாட்டு மையம் மற்றும் PSA ஆக்ஸிஜன் ஆலைகளை ஆய்வு செய்தேன் என்றும், தொற்றை ஒழிப்பதில் மாநில சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுவதாகவும் அதில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours