மங்களூரு,
கர்நாடக மாநிலம் மங்களூருவில் செல்போன் திருடிக்கொண்டு ஓடிய திருடனை போலீஸ் ஒருவர் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
நேற்று மங்களூருவில் நேரு மைதானம் அருகே சில திருடர்கள் ஒரு நபரின் செல்போனை திருடிவிட்டு தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து காரில் இருந்து இறங்கிய போலீசார் சினிமா பாணியில் திருடர்களைத் துரத்தத் தொடங்கினர்.
#Karnataka #WATCH #Mangaluru #ipdtamil Assistant Police Sub-Inspector Varun chase and nab a robber who had snatched away mobile phone from a man who was resting pic.twitter.com/Rz0kCZb0MN
— IP DIGITAL TAMIl 24×7 MEDIA PVT LTD (@ipd_tamil) January 13, 2022
உதவி எஸ்.ஐ வருண் அல்வா நீண்ட தூர துரத்தலுக்குப் பிறகு அந்த திருடனைப் பிடித்தார். இதையடுத்து தரையில் திருடனை கிடத்தி அவன் மேல் உட்கார்ந்த்து தப்பிச் செல்லாமல் பிடித்தார். சிறிது நேரம் கழித்து, மற்ற போலீசார்கள் அங்கு வந்து திருடனை அழைத்துச் சென்றனர்.
அவனிடமிருந்து திருடப்பட்ட செல்போன் மீட்கப்பட்டது. மேலும் அவனது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பாண்டேஷ்வர் போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எஸ்.ஐ வருண் திருடனை துரத்திச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரை பாராட்டிய மாநகர ஆணையர் சசிகுமார் காவல் துறை சார்பில் எஸ்.ஐ வருணுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
– வெங்கடேஸ்வரன்
+ There are no comments
Add yours