மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது.
உலக தமிழர்களின் ஒப்பற்ற நன்னாளாம் பொங்கல் திருநாளில் உலக வாழ் தமிழர்கள் அனைவருக்கும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு நல்ல சிந்தனைகளை மனதில் தேக்கி மகிழ்வுடன் இந்த பொங்கலை கொண்டாடுவோம். சாதி சமய வேறுபாடுகளை கடந்து பொங்கல் பண்டிகையை வரவேற்ப்போம் .
இந்த நாளில் உழவர் பெருமக்களை போற்றி இயற்க்கைக்கு நன்றி கூறுவதோடு நம் உழவு தொழிலுக்கு உறுதுனையாக இருக்கும் கால் நடைகளுக்கும் உற்றார் உறவினர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நந்நாளாம் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதோடு வறுமை நீங்கி சமதர்மம் தழைத்தோங்க தை பொங்கலில் நாம் உறுதியேற்ப்போம் . இவ்வாறு ஷாஜகான் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours