இந்தியாவில் முழு ஊரடங்கு விரைவில் அமல்படுத்தவுள்ளதாக சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து மத்திய பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ விளக்கம் அளித்துள்ளது.
முழு ஊரடங்கு அமல்?
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று தற்போது நாடு முழுவதும் வெகுவேகமாக பரவி வருகிறது. இத்தகைய ஓமைக்ரான் தொற்றை தொடர்ந்து மீண்டும் நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் நாடு முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள், தினசரி நாட்களில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் கட்டுப்பாடுகளுடன் பண்டிகை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதனை கருதி விரைவில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் முழு ஊரடங்கை உறுதிபடுத்தும் வகையில் சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இத்தகைய புகைப்படங்களை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ விளக்கம் அளித்துள்ளது. அதனை தொடர்ந்து இத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் உண்மை இல்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours