சேலம்:
சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 58 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி இன்று துவங்கியது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 15 வயதுக்கு மேற்பட்ட 25 லட்சத்து 43 ஆயிரத்து 573 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 16 லட்சத்து 19 ஆயிரத்து 871 பேருக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் முடிவடைந்த அனைத்து சுகாதார பணியாளர்கள் முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி இன்று துவங்கியது. இதனை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 58 ஆயிரம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்து தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours