தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான பலர் பணம், பொருள் இழப்பது மட்டுமின்றி சில நேரங்களில் தவறான செயல்களையும், அவர்கள் தற்கொலை செய்வதிலாமல் குடும்பத்தினரின் உயிர்களையும் பறிப்பது அதிகரித்து விட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னை கோயம்பேட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த தினேஷ் என்கின்ற நபர் மன அழுத்தத்தின் காரணமாக தூக்கிட்டு நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினேஷ் கோயம்பேடு பகுதியில் இன்டர்நெட் சேவை மையத்தை நடத்தி வருவதாகவும் சில வருடங்களாக இவர் ஆன்லைன் விளையாட்டில் அதிக ஈர்ப்பு கொண்டு கடன் வாங்கி விளையாடி வந்துள்ளதாகவும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த கோயம்பேடு காவல் துறையினர் இறந்த உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகஅனுப்பி விட்டு வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் தினேஷ் சில வருடங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் கடன் வாங்கி பணம் செலுத்தி விளையாடி வந்ததாகவும், கடனாளிகள் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சல் காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார் என்பதும் போலீஸ் விசாரணயில் தெரிய வந்துள்ளது.
+ There are no comments
Add yours