சென்னை,
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளாது. இதனால் பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொற்று பரவல் காரணமாக நாளை வரை இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தற்போது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் ஞாயிறு முழு ஊரடங்கின் மூலம் தொற்றை படிப்படியாக குறைக்க முடியும். இதன் பலன் மெதுவாக தெரியவரும். மக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவேளியை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
ஒமைக்ரானும் பரவி வருவதால், மக்கள் கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தற்போது போடப்பட்டுள்ள ஞாயிறு முழு ஊரடங்கு தற்போதைய சூழலின் அவசியமாக உள்ளது. பிப்ரவரி வரை தொற்று அதிகம் இருக்கும் என்ற கணிப்பு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முழு ஊரடங்கு விதிக்கக்கூடாது என்பதே நிபுணர்களின் கருத்தாகும்”. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
+ There are no comments
Add yours