சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.43.20 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
திருச்சி மண்டலம் – ரூ.42.59 கோடி, சேலம் மண்டலம் – ரூ.40.85 கோடி, கோவை மண்டலம் – ரூ.41.28 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் மதுகுடிப்போர் நேற்றே டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்கி குவித்தனர்.
சென்னையில் இரவுநேர ஊரடங்கை மீறியதாக 761 வாகனங்களை பறிமுதல் செய்து 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாத 5,971 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.11,94,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பால் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையில் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
+ There are no comments
Add yours