SUNDAY FULL LOCKDOWN : தமிழகத்தில் முழு ஊரடங்கான நாளை (ஜனவரி 9) திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு அனுமதி: தமிழக அரசு!!

Estimated read time 1 min read

சென்னை:

கொரோனா பரவலை தடுப்பதற்காக, அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளை ( 9-1-2022) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.  இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.


* பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.

* 9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும்.  இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

* 9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours