சென்னை:
சென்னையில் இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றிய 547 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்ரோக்கள், 14 இலகுரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு நேரத்தில் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் பங்க்கள், பால் விநியோகம், பத்திரிக்கை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்ல வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் தடையை மீறி வெளியே வந்தால் நடவடிக்கை எடுப்பதோடு வாகன்ங்களும் பறிமுதல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் அனைவரும் கோவில்களின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் பொதுமக்கள் முகக்கவசம் இன்றி யாரும் வெளியே வரக்கூடாது என தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. முகக்கவசம் இன்றி வெளியே வருபவர்கள் மீது சென்னை மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது.
+ There are no comments
Add yours