தடைசெய்யப்பட்ட 6 கோடியே 50 லட்சம் மதிப்புடைய அம்பர்கிரிஸ் எனப்படும் வாசனை திரவியம்…! இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தவர் கைது..

Estimated read time 1 min read

தூத்துக்குடி:

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 6 கோடியே 50 லட்சம் மதிப்புடைய தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட அம்பர்கிரிஸ் எனப்படும் வாசனை திரவியப் பொருளை சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தவர் கைது – கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

♻️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் திருச்செந்தூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையற்கரசி தலைமையில் உதவி ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் காவலர்கள் சுந்தர்ராஜ், ஆனந்த், விஜய் ஆகியோர் அடங்கிய போலீசார் நேற்று (04.01.2022) உடன்குடி வில்லிகுடியிருப்பு சந்திப்பு ரோட்டில் வாகன தணிக்கை செய்த போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த TN 72 AQ 1738 HERO XTREME என்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் முருகேஷ் (27), த/பெ. திருமலைநம்பி, பரதர் தெரு, செய்துங்கநல்லூர் என்பதும், அவர் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட திமிலங்கத்தின் வாயிலிருந்து வெளிவரும் உமிழ்நீர் சுமார் 6 ½ கிலோ எடையுள்ள ரூபாய் 6 ½ கோடி ( 6 கோடி 50 லட்சம் ) மதிப்புள்ள அம்பர்கிரிஸை சட்டவிரோத விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.

♻️ இதனையடுத்து மேற்படி போலீசார் முருகேஷை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 6 ½ கோடி மதிப்பிலான 6 ½ கிலோ அம்பர்கிரிஸ், இருசக்கர வாகனம் மற்றும் அவரிடமிருந்த 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இன்று (05.01.2022) திருச்செந்தூர் வனச்சரக அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

♻️ மேற்படி வாகன தணிக்கையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட அம்பர்கிரிஸை இருசக்கர வாகனத்தில் கடத்தியவரை கைது செய்து, அம்பர்கிரீஸையும் பறிமுதல் செய்த குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours