சேலம் வடக்கு மாவட்டம் – விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு…

Estimated read time 1 min read

சேலம்;

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட்டு பொய் வழக்குகளை போட்டு தலித் இளைஞர்கள் மீது விசாரணை என்ற பெயரில் ஓமலூர் காவல் துறையினர் அத்துமீறி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் அவர்கள் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக.

சேலம் ஓமலூர் காமலாபுரம் ஏர்போர்ட் காலனி அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை சமூக விரோதிகள் சேதப்படுத்தி இருந்தனர். இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அமைதியை பங்கம் விளைவிக்கும் விதமாக சட்டத்திற்கு புறம்பாக சிலர் செயல்பட்டு அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து ஓமலூர் காவல் துறையில் புகார் செய்யப்பட்டு இதுவரை காவல்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அந்த பகுதியில் வசித்து வரும் அப்பாவி இளைஞர்களை விசாரணை என சம்மன் அனுப்பி காவல்துறையினர் அடித்து துன்புறுத்தி வருகின்றனர். தலித் இளைஞர்களை அசிங்கமாக தகாத வார்த்தைகளை பேசி திட்டி வருகின்றனர். அச்சுறுத்தி வாக்குமூலமும் பெற்று உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட்டு தலித் இளைஞர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ஓமலூர் காவல் துறை உடனடியாக கைவிட வேண்டும். இதற்கு சேலம் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்த மனுவை வழங்குவதற்காக விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் அவர்கள் தலைமையில் வந்தனர் உடன் மாவட்ட பொருளாளர் மெய்யழகன், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் மாதேஸ்வரி, தொகுதி செயலாளர் சிவக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்வளவன், ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி, நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய செயலாளர் ராஜ்குமார்,வீரமணி உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாவட்ட செயலாளர் வசந்த்

விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த்

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பள்ளிகள் செயல்படாமல் ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவ-மாணவிகள் பாடம் பயின்று வந்தனர். இந்த நிலையில் பள்ளி குழந்தைகளின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை சரி செய்யும் விதமாக தமிழக அரசு இல்லம் தேடி கல்வித்திட்டத்தை அமல்படுத்தியது.

அதன் ஒரு பகுதியாக இன்று சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் துவக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 2845 மையங்களில் முதற்கட்டமாக இன்றையதினம் இத்திட்டம் தொடங்கப் பட்டுள்ளது இதில் 1497 தொடக்கநிலை மையங்களும் 1348 உயர் தொடக்கநிலை மையங்களும் அடங்கும் இம்மையங்களில் 2845 பேர் தன்னார்வலர்கள் ஆக பணிபுரிய உள்ளனர்
இதில் 25447 தொடக்க நிலை மாணவர்களும்
21763 உயர் தொடக்கநிலை மாணவர்களும் என 47210 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்
இந்த நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours