மணிப்பூர்;
மணிப்பூரில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். இதையொட்டி இன்று மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.4800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி பேசியதாவது; ஒரு காலத்தில் மணிப்பூர் தனித்து விடப்பட்டிருந்தது.
நான் பிரதமராக பதவியேற்கும் முன் பலமுறை இங்கு வந்திருக்கிறேன். அப்போது இங்குள்ள மக்கள் மனதில் சுமந்துள்ள துயரங்களை கேட்டறிந்தேன். 2014-ம் ஆண்டுக்கு பிறகு மொத்த இந்திய அரசையும் உங்கள் வாசலுக்கே கொண்டு வந்தேன். சில வருடங்களுக்கு முன்பு மணிப்பூரில் 6 சதவீத மக்களுக்கு மட்டுமே வீட்டில் குழாய் வழியாக குடிநீர் கிடைத்தது. இன்று ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 60 சதவீத மக்களுக்கு குழாய் நீர் கிடைத்துள்ளது. நீங்கள் மணிப்பூரில் நிலையான உறுதியான அரசை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.
பெரும்பான்மை பலத்துடன் முழு ஆற்றலுடன் உங்களுக்காக பாஜக அரசு இயங்கி வருகிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஒரு சிகரம் ’ஹாரியட்’ என்று அழைக்கப்படுகிறது. நாங்கள் அதன் பெயரை மணிப்பூர் மலை என மாற்ற இருக்கிறோம். இதற்கு முன் இருந்த அரசாங்கம் ’கிழக்கு பக்கம் பார்க்கவேண்டாம்’ என்ற ஒரே ஒரு கொள்கையை மட்டுமே வைத்திருந்தது. ஆனால் நாங்கள் கிழக்கு மாநிலங்களுக்காக பணியாற்றுவோம் என்ற கொள்கையை வைத்திருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
+ There are no comments
Add yours