சென்னை;
சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு சாலைகளில் போக்குவரத்து தடை ஏற்பட்டு, சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் இன்று மாலையில் இருந்து பெய்து வரும் மழையால் சாலையில் பரவலாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. சென்னை அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில் பட்டாபிராம் திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் மூன்று மணி நேரமாக மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பூவிருந்தவல்லி சாலை, அம்பத்தூர் பிராதான சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/ipd_tamil/status/1476607711177412625?s=20
அதேபோல் கொரட்டூர் 49 தெருக்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து விட்டதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அண்ணா சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, போரூர், அண்ணா உள்ளிட்ட இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
சென்னையில் தொடர் மழையால் பல்வேறு பகுதிகள் மிதக்கும் நிலையில் அலுவலகம் முடித்து வீடு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஓலா கேப் புக் செய்தால், 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துகிறது. மக்களின் சிரமத்தை பயன்படுத்தி கொள்ளையடிப்பது நியாயமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
+ There are no comments
Add yours