சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் பகுதிகளில் நகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு இருந்தது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.பலமுறை அவர்களுக்கு அவகாசம் கொடுத்தும் தொடர்ந்து கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் வாடகை செலுத்தவில்லை.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள்
எடப்பாடி பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்று கடைகளுக்கு சீல் வைத்தனர்.போதிய காலம் அவகாசம் ஒதுக்கப்பட்டும் இதுவரை வாடகை செலுத்தாத இருந்த இருபதிற்கும் மேற்பட்ட கடைகளை நகராட்சி ஆணையர் சேகர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
இதனால் சேலம் எடப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
– சேலம் ஆ.மாரியப்பன்
+ There are no comments
Add yours