ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான்
தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஒமைக்ரான் பரவல் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்க்கூட்டம் நடத்தினார்.
இந்த நிலையில், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மு. க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதால் கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க
வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனைத்து,
கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி முகாம்களுக்கு சென்று மக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours