சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே, கூடமலை கிராமத்தில் வீடுகளில் பதுக்கி வைத்து, கூலி ஆட்கள் மூலம் சாராயம் விற்பனை செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. சாராய வியாபாரிகளை கைது செய்யும்படி, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார். கெங்கவல்லி, ஆத்தூர் போலீசார், கெங்கவல்லி, கூடமலை, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சாராய விற்பனையில் ஈடுபட்ட பிரபாகரன் மனைவி சந்தோஷம், (25), மூக்கன் மனைவி மாதேஸ்வரி, (51), ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் பறிமுதல் செய்த, ஐந்து லிட்டர் விஷ சாராயத்தை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
-Naveenraj
+ There are no comments
Add yours