பட்டப்பகலில் அரசு பள்ளி மைதானத்தில் மாணவி எரித்துக்கொலை? போலீஸ் விசாரணை
திண்டுக்கல்,
ஆனால் சிறுமியின் முகம் தீயில் கருகிய நிலையில் இருந்ததால் அது பிரித்திகாவா? என்று தெரியவில்லை. இதையடுத்து அந்த மாணவிகள் பிரியதர்ஷினியிடம் இதுகுறித்து கூறினர். அதைக்கேட்டு பதறிப்போன பிரியதர்ஷினி ஓடிச்சென்று பார்த்த போது தீயில் கருகி கிடப்பது தனது தங்கை தான் என்று அறிந்ததும் அதிர்ச்சியடைந்தாள். உடனே பள்ளி நிர்வாகத்தினருக்கும், தனது தந்தைக்கும் அவள் தகவல் கொடுத்தாள். இதைக்கேட்டு பதறி துடித்து பள்ளிக்கு ஓடிவந்த சத்யராஜ், தீயில் எரிந்து கிடந்த மகளை பார்த்து கதறி அழுதார். அப்போது அவளுடைய உடலில் அசைவு தெரியவே மகளை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தாண்டிக்குடி போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவி எரிந்து கிடந்த இடத்தை பார்வையிட்டனர். அப்போது அங்கு ஒரு காலி தண்ணீர் பாட்டிலும், அதன் அருகில் ஒரு தீப்பெட்டியும் கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
+ There are no comments
Add yours