டெல்லி:
ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா என மதுரை எம்பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் ஐஆர்சிடிசி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த் அல்லது சீனியர் சிட்டிசன், தட்கல் என்ற தெரிவுகள் இருக்கும். மேலும் திவ்யாங் என்ற ஒரு தெரிவும் இருக்கும். திவ்யாங் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தெய்வீக உறுப்பு கொண்டவர் என தமிழில் பொருளாம். மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர் வைத்த பெயர் அது.
அதிகாரிகளின் விசுவாசம்
அதிகாரிகளின் விசுவாசமோ என்னவோ ஐஆர்சிடிசி முன் பதிவில் அதை சொருகி விட்டார்கள். இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் 14135 பேர்தான். தமிழ் 8 கோடி பேரின் தாய்மொழி. ஒன்றிய அரசும் அதன் அதிகாரிகளும் நினைத்தால் 14000 பேரின் தாய்மொழியை புரிகிறதா புரியாதா என்று கூட யோசிக்காமல் திணிக்க முடியும்.
தொழில்நுட்ப மேம்பாடு
ஆனால் இவ்வளவு தொழில்நுட்ப மேம்பாடு இருந்தாலும் 8 கோடி பேரின் தாய்மொழியை முன்பதிவுக்கான தெரிவு மொழியில் இணைக்க முடியாது. ஆங்கிலமே திணற அடிக்கும் போது அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கைவிடுங்கள். வார்த்தைகளில் புனிதம் இருந்தால் போதாது. நோக்கம் புனிதமாக இருக்க வேண்டும் என சு வெங்கடேசன் தனது போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்தை ஆதரித்து ட்வீட்
இவரது கருத்துக்கு பலர் ஆதரித்தும் எதிர்த்தும் ட்வீட் போட்டுள்ளனர். எங்கள் மாநிலத்தின் மொழி தமிழ் தான் தமிழர்களுக்கு தமிழ் தான் தாய்மொழி அந்தந்த மதத்திற்கு அந்தந்த இனத்திற்கு அவர்கள் மொழி முக்கியம் எங்களுக்கு சமஸ்க்ரிதம் தேவையில்லை எங்களுக்கு இந்தி பேசிய அவசியமில்லை எங்கள் மீது திணித்தால் நாங்கள் தனி நாடு பெறுவது மிகவும் தொலைவில் இல்லை என்கிறார் ஒரு வலைஞர்.
சொலவடை
கோவையில் ஒரு சொலவடை உண்டு” வெறும் வாய் பேசி, கடைவாய் குழியானதுதான் மிச்சம்” என்று. ஒன்றிய அரசின் செயல்பாடும் இதைபோல்தான் உள்ளது. உலக அரங்கில் பேசும்போது, கனியன் பூங்குன்றனார், திருவள்ளுவருடைய படைப்புகள் பறைசாற்றப்படும். தனது நாட்டில் தமிழுக்கு மரியாதை இல்லை. தலையெழுத்து என்கிறார் இந்த வலைஞர்.
அஸ்ஸாம் மக்களுக்கு புரியுமா
ஐயா நண்பரே தட்கல் tatkal என்ற சொல் இந்தி வார்த்தை immediately உடனே என்று பொருள் படும் ஆங்கில வார்த்தையல்ல தட்கல் ஏற்றுக் கொண்டீர்கள் divyaang என்ன தவறு சரி மாற்று திறனாளி வார்த்தை டெல்லி அசாம் மக்களுக்கு புரியுமா என்கிறார் இந்த வலைஞர்.
+ There are no comments
Add yours