அ.தி.மு.க முதற்கட்ட உட்கட்சி தேர்தல் விறுவிறு.. இன்று எங்கெங்கு நடைபெறுகிறது.. முழு விவரம்!.,

Estimated read time 1 min read

சென்னை:

அ.தி.மு.க உட்கட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் உட்கட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க உட்கட்சி முதற்கட்ட தேர்தல் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வில் கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அ.தி.மு.க உட்கட்சி தேர்தல்

உட்கட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளை அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். இன்று 13-ம் தேதி மற்றும் நாளை 14-ம் தேதி திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு ஆகிய இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

நடைபெறும் பகுதிகள்

மேலும் கன்னியாகுமரி கிழக்கு,கன்னியாகுமரி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, சேலம் மாநகர்,சேலம் புறநகர், திருநெல்வேலி, விருதுநகர் கிழக்கு,விருதுநகர் மேற்கு,மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர் ,அரியலூர், கரூர், நீலகிரி, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் மேற்கு,ஈரோடு புறநகர் கிழக்கு, நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு,கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய பகுதிகளிலும் இன்றும் நாளையும் தேர்தல் நடைபெறுகிறது.

சென்னைக்கு எப்போது?

வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர், தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு) உள்ளிட்ட பகுதிகளுக்கு ருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி, கோவை

தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் மேற்கு, திருப்பூர் புறநகர் கிழக்கு, தருமபுரி உள்ளிட்ட முதற்கட்ட தேர்தலில் விடுபட்ட பகுதிகளுக்கும் அன்றைய தினங்கள் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours