நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரியும் உதவி கோட்ட பொறியாளர் செல்வராஜ் உதவி பொறியாளர் பிரேனேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு தங்களுக்கு இஷ்டம் போல கொள்ளையடித்து வருகிறார்கள் ஊழியர்களின் விரோதப் போக்கை கடைபிடித்து வருவதோடு மட்டுமல்லாமல் அராஜகம், அட்டூழியம் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் இவர்கள் இருவரின் அராஜகத்தை கண்டித்து இன்று 10.11.2021 காலை 11 மணி முதல் சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பாக தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது இதில் இவர்கள் இருவரின் ஊழல்களைப் பற்றியும் கடந்த காலங்களில் இவர்கள் செய்த லஞ்ச லாவண்யத்தை பற்றியும் தொடர்ந்து முழக்கமிட்டு வருகிறார்கள் இதனால் போலீஸ் அங்கு குவிக்கப்பட்டுள்ளது சாலைப் பணியாளர்கள் தங்களுக்கான மதிய உணவை விறகடுப்பு கொண்டு அலுவலகம் முன்பு தயார் செய்து வருகிறார்கள் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டி விட்டு ஓட்டம் எடுத்து விட்டனர் இதனால் அன்றாட பணிகள் பெரிதும் பாதித்து வருகிறது ஒரு அரசு அலுவலகத்தை பூட்ட
எவருக்கும் உரிமை கிடையாது என்பது அனைவரும் அறிந்தது ஆனால் சேந்தமங்கலம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் காலை முதலே பூட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சேந்தமங்கலம் உதவி கோட்ட பொறியாளர் செல்வராஜ் உதவி பொறியாளர் பிரேனேஷ் ஆகிய இருவரின் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்
+ There are no comments
Add yours