9 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளி சிறை தூக்கிட்டு தற்கொலை!
சேலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாரமங்கலத்தை மாதேஷ் என்பவரின் மகன் தனபால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியை, காட்டுப்பகுதிக்குள் அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியதோடு அச்சிறுமியை கொலை செய்துள்ளார். இதனை அடுத்து தாரமங்கலம் போலீசார், வாலிபர் தனபாலை போக்சோ சட்டத்தில் கைது செய்து, வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து தனபால் மீது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால் விரக்தியில் இருந்த தனபால், சிறையின் அறைக்குள் உள்ள ஜன்னலில், துண்டு மூலமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சிறை அதிகாரிகள் உடனடியாக, அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
+ There are no comments
Add yours