பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – முழு விவரம் :-
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சேலம், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ளது. திருச்சி, திருவண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours