சேலம்;
சேலத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
75 ஆவது சுதந்திர தின விழா மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சேலத்தில் பொதுமக்களுக்கு
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில் வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 100 க்கும் மேற்பட்ட 2 சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தவாறும், 4 சக்கர வாகன ஓட்டிகள் சீல்பெல்ட் அணிந்தவாறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய இந்த பேரணி, அடிவாரம் வரை சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.
+ There are no comments
Add yours