அஜர்பைஜான் மாகாணத்தில் ஒரு அணையைத் திறக்க இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்றிருக்கிறார். அப்போது அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர், 12 மணி நேரத்திற்கும் மேலாக தேடி, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களை முற்றிலும் எரிந்த நிலையில் கண்டுபிடித்தனர். இரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த விபத்து நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்ராஹிம் ரைசி

இப்ராஹிம் ரைசி

உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, ஹெலிகாப்டரில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, இமாம் முகமது அலி அலெஹாஷேம், விமானி, பாதுகாப்பு மெய்க்காப்பாளர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. செஞ்சிலுவைச் சங்கத் தலைவர்,“ஹெலிகாப்டரில் பயணித்தவர்களில் யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *