நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடியின் பல்வேறு பிரசாரங்கள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், எதிர்க்கட்சி தரப்பு அதற்கு கடுமையான ஆட்சேபனைகளையும் தெரிவித்து வந்தது.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனமான பி.டி.ஐ-க்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில்,“நான் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக மட்டுமே பேசுகிறேன்.

மோடி

அரசியல் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. அதைத்தான் நான் கூறி வருகிறேன். அம்பேத்கரும், ஜவஹர்லால் நேருவும் மத அடிப்படையில் இடஒதுக்கீடு இல்லை என்று முடிவு செய்திருந்தனர். இப்போது காங்கிரஸ் அதிலிருந்து விலகிச் செல்கிறது. அவர்களை அம்பலப்படுத்துவது எனது பொறுப்பு. எனது தேர்தல் உரைகளில் சிறுபான்மையினரை குறிவைக்க வேண்டும் என்று எண்ணியதில்லை. பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிராக இன்று மட்டுமல்ல எப்போதும் இருந்ததில்லை. ஆனால், காங்கிரஸ் திருப்திப்படுத்தும் பாதையை பின்பற்றுகிறது.

காங்கிரஸின் அரசியல் சமாதானம். நாங்கள் சர்வ சம தர்ம அரசியலை நம்புகிறோம். நாங்கள் யாரையும் சிறப்புக் குடிமக்களாக ஏற்கத் தயாராக இல்லை. அதனால் அனைவரையும் சமமாக கருதுகிறோம். நான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் கட்சியின் முத்திரை இருந்ததாக கூறியபோது, காங்கிரஸ் கட்சி அன்றே எனக்கு மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அமைதியாக இருந்ததால், காங்கிரஸ் குறித்து இந்திய மக்களுக்கு படிப்படியாக புரியவைக்க வேண்டிய இடத்தில் இருக்கிறேன் என்று எனக்குத் தோன்றியது.

காங்கிரஸ் – ராகுல் காந்தி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், சிறுபான்மையினருக்கு டெண்டர் வழங்குவதில் இடஒதுக்கீடு அளிப்பதாக உறுதியளிக்கிறது. நீங்கள் ஒரு பாலத்தை உருவாக்க விரும்புகிறீர்கள். டெண்டருக்கு யாருக்கு ஏலம் கொடுப்பீர்கள்? நிபுணத்துவம், தொழில்நுட்பம் உள்ள ஒருவருக்குதானே… ஆனால் அங்கேயும் இட ஒதுக்கீடு கொண்டு வர விரும்பினால், என் நாட்டின் வளர்ச்சி என்னவாகும்?

அனைத்து முஸ்லிம்களையும் ஓ.பி.சி இடஒதுக்கீடு பிரிவின் கீழ் கொண்டு வர கர்நாடக காங்கிரஸ் அரசு எடுத்த முடிவால், ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் அவர்கள் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது. தேர்தல் அரசியலுக்காக நமது அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பின்மை உணர்வை அழித்தவர்கள் இவர்கள்தான் என்று நான் நம்புகிறேன். அரசியலமைப்பின் அந்த உணர்வை மீட்டெடுக்க விரும்புகிறேன். அதனால்தான் இவர்களை அம்பலப்படுத்துவது அவசியம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *