தனது பிரசாரப் பயணத்தின் எட்டாவது நாளான மார்ச் 31-ல், கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான ஈரோடு, நாமக்கல், கரூர் தொகுதிகளில் பிரசாரம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பிரசாரத்துக்கு வந்த அவரை வரவேற்றதில் தொடங்கி பிரசார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது வரை பல சொதப்பல்கள் அரங்கேறியிருக்கின்றன. அதன் உச்சமாக, ஈரோடு உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அங்கிருந்த பெண் வியாபாரி ஒருவர், ‘என் கணவர் அரசு வேலையிலிருக்கிறார் என்பதற்காக எனக்கு உரிமைத்தொகை தரவில்லை’ என முறையிட, ‘அப்படிக் கேட்பது நியாயமில்லையே?’ என்று பதில் சொன்னார் முதல்வர்.

வியாபாரி விஜயா

வியாபாரி விஜயா

ஆனாலும் விடாத அந்தப் பெண், ‘என் கணவர் சாப்பிட்டால் என் வயிறு நிரம்பிவிடுமா?’ என்று முதல்வரிடம் எதிர்க் கேள்வி எழுப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாக, அதை எதிர்க்கட்சிகள் தங்கள் பரப்புரைக்குப் பயன்படுத்திக்கொண்டன. இதில் கடுப்பான முதல்வர் தரப்பு, “தேர்தல் நேரத்தில் மீடியோ ஃபோகஸ் அதிகமாக இருக்கும் என்று தெரியாதா… இப்படிப்பட்ட ஆட்களை ஏன் என்னோடு பேசவைக்கிறார்கள்?” என அந்தத் தொகுதியின் பொறுப்பு அமைச்சரைக் கடிந்துகொண்டாராம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *