முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங்குக்கு தற்போது 91 வயதாகிறது. கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவந்த மன்மோகன் சிங் ஏப்ரல் 3-ம் தேதி (இன்று) ஓய்வுபெற்றார். 1991-ம் ஆண்டு, நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளைப் புகுத்தினார்.

மோடி - மன்மோகன் சிங்

மோடி – மன்மோகன் சிங்

2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தார் மன்மோகன் சிங். 2014-ல் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகும், மாநிலங்களவை உறுப்பினராக அவர் தொடர்ந்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *