2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கப் போராடுகிறது பா.ஜ.க. பா.ஜ.க-வை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி உட்பட 28 கட்சிகள் இணைந்து `இந்தியா’ எனும் கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூரிலும், மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றன. இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நிதிஷ் குமார்

அப்போது `இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியில் பேசியிருக்கிறார். அவரது பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்படி தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலளித்த நிதிஷ் குமார், “தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும். நாடு ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட்டது. இன்னும் காலனித்துவ எச்சங்களைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

நிதிஷ் குமாரின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நிதிஷின் பேச்சுக்கு பதிலளிக்கும்விதமாக ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “மதிப்பிற்குரிய நிதிஷ் குமார் அவர்களே… இந்துஸ்தான என்பது இந்துக்களின் நிலம். இது இமயமலைக்கும் இந்து சாகராக்கும் இடையில் உள்ள நிலம்தானே தவிர, இந்தி மொழியின் நிலமல்ல.

சத்குரு

மக்கள்தொகையில் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரே அந்தஸ்து இருக்கும் என்ற ஞானத்துடன்தான், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு மாநிலமும், அதன் சொந்த மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடன் இருப்பதால், இது போன்ற அசாதாரணமான அறிக்கைகளைத் தவிர்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறப்பிட்டிருக்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *