இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர், சனாதன தர்மம் குறித்து இழிவாக பேசி உள்ளார். ஆனால்
இதை, அக்கூட்டணி கண்டிக்கவில்லை. இந்த விவகாரத்தில், தங்களது நிலைப்பாட்டை காங்., தலைவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.பிரமோத் சாவந்த்கோவா முதல்வர், பா.ஜ.,
இண்டியா வெற்றி பெறும்!
பா.ஜ., ஆதரவுள்ள செய்தி சேனல்களை புறக்கணிப்பது என்பது, இண்டியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து எடுத்த முடிவு. இதை வரவேற்கிறேன். வரும் லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்.
தேஜஸ்வி யாதவ்பீஹார் துணை முதல்வர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
கொள்ளை அடிப்பதில் கவனம்!
மஹாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகாதி கூட்டணி, மராத்வாடா பகுதிக்கு என்ன செய்தது? அந்த கூட்டணி கட்சிகள், பணத்தை கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தின.தேவேந்திர பட்னவிஸ்மஹாராஷ்டிரா துணை முதல்வர், பா.ஜ.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
