புதுச்சேரி,- சட்டசபை நில மாற்றம் விவகாரத்தில், வைத்திலிங்கம் எம்.பி., வேண்டுகோளை ஏற்று நானே சி.பி.ஐ., விசாரணைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக சபாநாயகர் செல்வம் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;

முன்னாள் முதல்வர்கள் வைத்திலிங்கமும், நாராயணசாமியும் தொடர்ந்து பொய் கூறி வருகின்றனர். இதனால் புதுச்சேரி சட்டசபைக்கு நில ஆர்ஜிதம் செய்த நிலத்தை திருப்பி கொடுத்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு வைத்திலிங்கம் எம்.பி. வேண்டுகோளை ஏற்று நானே அனுப்பி வைக்கிறேன்.

எம்.எல்.ஏ.,க்கள் விரும்பினால் இதை சட்டசபையில் விவாதிக்கவும் தயாராக உள்ளேன். என் மடியில் கனமில்லை, வழியில் எந்த பயமும் இல்லை. ஏற்கனவே ரூ.9.50 லட்சம் வழக்கில் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் எம்.பி., பல்டி அடித்த கதை புதுச்சேரி மக்களுக்கு நன்றாக தெரியும். 9 ஆண்டாக ஆர்ஜிதம் செய்த நிலத்தை இழுத்தடித்து ஒப்படைத்தது ஏன் என விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.,க்கு பரிந்துரை செய்ய உள்ளேன்.

கடந்த 2018-ல் அந்த நிலம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.,க்கு அனுப்ப சட்டசபை செயலரிடம் மனு தயாரிக்க கூறியுள்ளேன். சட்டத்துறையுடன் ஆலோசனை நடத்தி விரைவில் மனுவை தயாரிப்பார். ஏற்கனவே நான் சட்டசபையில் கட்ட பஞ்சாயத்து செய்வோர் வரக்கூடாது என கூறியிருந்தேன். சமீபத்தில் எம்.எல்.ஏ., க்கள் மனு அளித்தனர். அதனடிப்படையில் குற்றவாளிகளை சட்டசபைக்குள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர்

கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

Dinamalar iPaper Combo
-->

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *