வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தமிழகத்திலிருந்து மூன்று பா.ஜ., தலைவர்கள் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த பா.ஜ., தலைவர் இல.கணேசன் நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராகவும், புதுச்சேரி துணை நிலை கவர்னராகவும் பணியாற்றி வருகிறார்.

latest tamil news

சமீபத்தில், இன்னொரு பா.ஜ., தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி நியமிக்கப்பட்ட சில கவர்னர்கள், தங்கள் சொந்த மாநிலத்திற்கு அடிக்கடி விஜயம் செய்து வருகின்றனர். ஆனால் ராதாகிருஷ்ணன், இப்போதைக்கு தமிழகம் வரப் போவதில்லையாம். இவர் கவர்னராக நியமிக்கப்பட்டதற்காக, இவருடைய ஆதரவாளர்களும், பா.ஜ., தலைவர்களும் கோவையில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், இதை மறுத்து, இப்போதைக்கு ஊருக்கு வரப்போவதில்லை என அவர்களிடம் தெரிவித்து விட்டாராம்.

‘கவர்னராக பதவியேற்று 100 நாட்கள் ஆன பின் தான் தமிழகம் செல்வேன்’ என ராதாகிருஷ்ணன் முடிவெடுத்துள்ளாராம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சுற்றிப் பார்த்து, அங்குள்ள மக்கள் நிலையை தெரிந்து கொள்வது தான் முதல் வேலை என்கிறாராம் அவர். இதையடுத்து, அவர் ஏற்கனவே தன் பயணத்தை துவக்கி, சில மாவட்டங்களை சுற்றி பார்த்துவிட்டாராம்.

latest tamil news

எந்த ஒரு கவர்னரும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான், தன் சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என ஒரு விதிமுறை உள்ளதாம். ஆனால், பெரும்பாலான கவர்னர்கள் இதை கண்டுகொள்வதில்லை.

Advertisement


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *