வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அதானி குழுமம் குறித்து, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கூட்டு பார்லிமென்ட் குழு விசாரிக்க வேண்டும் எனக்கோரி, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதோடு பார்லி.,யின் பட்ஜெட் கூட்டத்தொடரையும் நடத்த விடாமல் முடக்கினர்.
![]() |
இந்நிலையில், அதானி குழுமத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். ‘ஹிண்டன்பர்க் அறிக்கை, அதானி குழுமத்தை, ‘டார்கெட்’ செய்து வெளியிடப்பட்டிருக்கலாம்.
‘எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் பார்லி.,யை முடக்கின. கூட்டு பார்லிமென்ட் குழு விசாரணையில் எனக்கு உடன்பாடில்லை’ எனக் குறிப்பிட்டு, காங்., முன்னாள் எம்.பி., ராகுலின் கருத்துக்கு எதிராக சரத் பவார் பேசினார்.
![]() |
இது காங்கிரசில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. ‘அதானியும், பவாரும் நண்பர்கள்; அதனால் தான் பவார் இப்படி பேசிவிட்டார்’ என்கின்றனர், காங்., தலைவர்கள்.
இதற்கிடையே, அதானி விவகாரத்தில் பவார் எடுத்த இந்த நிலைப்பாட்டில் பிரதமர் மோடி மகிழ்ச்சியடைந்தாராம். இதையடுத்து, தன் நெருங்கிய நண்பர் வாயிலாக பவாருக்கு செய்தி அனுப்பி நன்றி தெரிவித்தாராம்.
Advertisement