புதுடில்லி,-புதுடில்லியில் முகமூடி அணிந்த மர்ம கும்பல், பா.ஜ., நிர்வாகியை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடில்லி துவாரகா பகுதியைச் சேர்ந்தவர் பா.ஜ., நிர்வாகி சுரேந்திரா மாட்டியாலா, 60. இவர், நேற்று முன்தினம் இரவு தன் அலுவலகத்தில் ‘டிவி’ பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியபடி வந்த மூன்று பேரில் இருவர் துப்பாக்கியுடன் அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.
ஒருவர் வெளியே மோட்டார் சைக்கிளில் காத்திருந்தார். உள்ளே நுழைந்த இருவரும் சுரேந்திரா மாட்டியாலாவை சரமாரியாக சுட்டனர்.
இதில் மாட்டியாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது.
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில், தப்பியோடிய மூன்று கொலைகாரர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Advertisement
