சமீபகாலமாக திருநர் சமூகத்தினர், LGBTQ சமூகத்தினர் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற பிரதானக் கட்டடம் மற்றும் கூடுதல் கட்டட வளாகங்களில் பல்வேறு இடங்களில் ஒன்பது பாலின நடுநிலைக் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருநர்கள், நான் பைனரி (Non binary) பாலின அடையாளம் பின்பற்றாதவர்களுக்காக (Gender nonconforming) இந்தக் கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதேபோல், வழக்கறிஞர்களின் ஆன்லைன் போர்ட்டலை பாலினம் உள்ளடக்கியதாக மாற்றியுள்ளது உச்ச நீதிமன்றம். இதில் புதிதாக ஒரு பகுதி உருவாக்கப்பட்டு அதில் வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராகும் போது அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் போது தங்கள் பாலினம் தொடர்பான விருப்பமான பிரதிப் பெயர்களை (Pronoun) தேர்ந்தெடுக்கும் கூடுதல் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது திருநர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் பாலினத்தை விருப்பம்போல் வெளிப்படுத்தும் வாய்ப்பை உறுதி செய்யும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.