சென்னை–‘காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தால் துணை பிரதமராகலாம்’ என, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆசை காட்டியதாக தகவல் வெளியாகிஉள்ளது.

latest tamil news

‘தொடர்ந்து மூன்றாவது முறையாக, பா.ஜ., ஆட்சி அமைப்பதை தடுக்க, காங்கிரஸ் எதற்கும் தயார்’ என்பதை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் சூசகமாக தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்த, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார், பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.

டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை நேற்று முன்தினம் நிதிஷ் சந்தித்தார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவும் உடனிருந்தார்.

ராகுலுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திய நிதிஷ், ‘காங்கிரசிலிருந்து பிரிந்தவர் என்றாலும், சரத் பவாருடன் கூட்டணி வைத்தே, மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது. அதுபோல, மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டியுடன் கூட்டணி வைக்க வேண்டும்.

‘ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், டில்லி, பஞ்சாப், குஜராத், கோவாவில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும். கெஜ்ரிவால், மம்தா, ஜெகன்மோகன், நவீன் பட்நாயக் ஆதரவு இல்லாமல், பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது’ என கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ராகுல், ‘மோடி மீண்டும் பிரதமராவதை தடுக்க, எந்த தியாகத்திற்கும் காங்கிரஸ் தயார். ஆனால், ஆம் ஆத்மி வெல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகிறது.

‘டில்லியில் காங்கிரஸ் ஓட்டு வங்கியை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வந்து விட்ட கெஜ்ரிவால், பஞ்சாப், கோவா, குஜராத்தில் காங்கிரசை மோசமாக தோற்கடித்து விட்டார்’ என கூறியுள்ளார்.

‘ஆம் ஆத்மி தனியாக போட்டியிட்டால், 100 லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றியை பாதிக்கும். மாறாக கூட்டணி வைத்தால் டில்லி, கோவா, ஹரியானாவில் பா.ஜ.,வை தோற்கடிக்கலாம். குஜராத்தில் பா.ஜ.,வுக்கு பயம் காட்டலாம்’ என, ராகுலிடம் நிதிஷ் எடுத்து கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையே, கெஜ்ரிவாலை நிதிஷ் சந்தித்து பேசினார். ‘2024-ல் மீண்டும் மோடி பிரதமரானால், எதிர்க்கட்சிகளின் நிலைமை மோசமாகி விடும். காங்கிரசும், ஆம் ஆத்மியும் கூட்டணி வைக்காமல் மோடியை வீழ்த்த முடியாது.

‘காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், நீங்கள் துணை பிரதமர்; உள்துறை அமைச்சர். டில்லி காவல் துறை உங்கள் கட்டுக்குள் வந்து விடும்’ என ஆசை காட்டியுள்ளார்.

ஆனாலும், அதற்கு பிடி கொடுக்காத கெஜ்ரிவால், ‘பா.ஜ., காங்கிரஸ் இரண்டையும் சம துாரத்தில் வைப்பதால் தான், டில்லி, பஞ்சாபை தாண்டி, கோவா, குஜராத்திலும் முக்கிய கட்சியாக வளர்ந்துள்ளோம்.

latest tamil news

‘காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் கட்சியின் வளர்ச்சி நின்று விடும். தேர்தலுக்கு பின், கண்டிப்பாக பா.ஜ., அல்லாத அரசு அமைய துணை நிற்போம்’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

‘எடுத்த எடுப்பிலேயே எந்த முடிவுக்கும் வந்து விட வேண்டாம்; தொடர்ந்து பேசுவோம்’ என கெஜ்ரிவாலிடம் கூறியுள்ளார் நிதிஷ்.

பின், கார்கேவை சந்தித்து, ‘கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றால், கெஜ்ரிவாலின் மனம் மாறி விடும். எனவே, அதில் கவனம் செலுத்துங்கள்’ எனக் கூறியதாக, காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *