அரியாங்குப்பம் : அரியாங்குப்பம், அருந்ததிபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் முகமது இப்ராகிம் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். பொறுப்பாசிரியர் கோமதி வரவேற்றார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் ஆனந்த பாஸ்கர், ஜெகதீசன், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் சுதா நன்றி கூறினார்.
Advertisement
