கரன் தாப்பர்  VS பிரசாந்த் கிஷோர்

சரி இந்த புரிதல்களோடு கரன் தப்பாருக்கு அளித்த பிரசாந்த்தின் நேர்காணலை அணுகுவோம்.

அந்த நேர்காணலில் பிரசாந்த் கூறுவதை முழுமையாக மறுக்கவும் முடியாது. அப்படியே உடன்படவும் முடியாது.

தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் வெற்றி தோல்வியில் தாக்கம் செலுத்துமா? என்றால் அதற்கான நேரடியான பதில் ‘இல்லை’ என்பதுதான். இதனை மூத்த ஊடகவியலாளர், தேர்தல் கருத்து கணிப்புகளின் முன்னோடி The verdict : Decoding India’s elction நூலின் ஆசிரியர் பிரணாய் ராயும் ஒப்புக் கொள்கிறார். இதனைத்தான் அந்த நேர்காணலில் பிரசாந்த் கிஷோரும் கூறுகிறார்.

அடுத்து, `தோல்வி அச்சத்தில் மோடி இஸ்லாமிய வெறுப்பைக் கையில் எடுத்து  இருக்கிறாரா, பதறுகிறாரா மோடி?’ இந்தக் கேள்விக்கும் இல்லை என்பதுதான் பதில். இதுதான் அவர்கள் வியூகம். தனது Target audience யார் என்பது அவருக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர்களைச் சாந்தப்படுத்த அப்படிப் பேசுகிறார் என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத உத்தரப் பிரதேச செய்தியாளர் ஒருவர்.

அவர், “அலிகரில் பேசும் போது இஸ்லாமியர்களுக்காக காங்கிரஸும், சமாஜ் வாடியும் எதுவுமே செய்யவில்லை என்றார் மோடி. இன்னொரு இடத்தில் அவர்களை ஊடுருவல் காரர்கள் என்கிறார். எங்கு என்ன பேசினால் எப்படியான விளைவு வரும் என்பது அவருக்கு நன்கு தெரியும்,” என்கிறார்.

 இது உண்மையும் கூட, பாஜகவுக்கு இதில் நீண்ட அனுபவம் இருக்கிறது. இந்த அனுபவத்தில்தான் திரிபுராவில் 20 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த மாணிக் சர்க்காரின் சிபிஐ(எம்) கட்சியை பாஜக வீழ்த்தியது. அதாவது திரிபுராவை பிரிக்க வேண்டும் என கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டே திரிபுராவில்  பாஜக வென்றதும் இந்த யுக்தியில்தான்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *