கச்சத்தீவை மீட்க அ.தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. 2008-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு 2013-ம் ஆண்டுக்கு பிறகு கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போதைய அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் வழக்கை துரிதமாக முடிக்கக்கேட்டு பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். கச்சத்தீவை மீட்பது தொடர்பாக எந்த கட்சியாவது வழக்கு தொடர்ந்து உள்ளதா?. கச்சத்தீவை மீட்போம் என்று மீனவர்களை ஏமாற்றக்கூடாது.

கச்சத்தீவு வழக்கு குறித்த ஆதாரங்களை காண்பித்த தளவாய் சுந்தரம்

கச்சத்தீவு வழக்கு குறித்த ஆதாரங்களை காண்பித்த தளவாய் சுந்தரம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கச்சத்தீவைப்பற்றி பேச உரிமை இல்லை. அவர்கள் கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து ஆதாரம் இருந்தால் அதை வெளியிட்டு பேச வேண்டும். எங்களிடம் அதற்கான முழு ஆதாரங்களும் உள்ளது. பத்து ஆண்டுகளாக வழக்கு கிடப்பில் கிடக்கிறது. அட்டார்னி ஜெனரலை பார்த்து வழக்கை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி நாங்கள் மனு அளித்தும் பயனில்லை. காங்கிரஸும், பா.ஜ.க-வும் இந்த வழக்கில் அமைதியாக இருக்கிறது. பா.ஜ.க தமிழ்நாட்டை நன்றாக குறிவைக்கட்டும், ஆனால் கச்சத்தீவு பிரச்னையில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.  கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்த அ.தி.மு.க-வுக்கு மீனவர் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *