போகும் ஊருக்குத் தகுந்த உடை மட்டும் அணிகின்ற மோடி அந்த ஊரையும், ஊர் மக்களையும், அவர்கள் மொழியையும், பண்பாட்டையும் மதிக்கிறாரா?. சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்துவிட்டு அன்னைத் தமிழுக்குக் கிள்ளிக்கூட தர மறுக்கிறார். ‘கூட்டாட்சி’ என்று சொல்லிவிட்டு, ‘காட்டாட்சி’ வேலையை பார்க்கிறார். பொய் கதைகளைச் சொல்லி… அது, மூலமாக மக்களை குழப்பி, ஏமாற்றி, தேர்தல் ஆதாயமடைய முடியுமா? என்றும் முயல்கிறார். தேன்கூட்டில் கை வைத்ததுபோல, ‘கச்சத்தீவு’ பிரச்னையிலும் பா.ஜ.க. மாட்டிக்கொண்டு தவிக்கிறது. 2014-ல் ஆட்சிக்குவந்த பா.ஜ.க உச்ச நீதிமன்றத்தில் என்ன கூறியது?. ‘கச்சத்தீவு மீண்டும் வேண்டுமென்றால், இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்’ என்றது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்தப் பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை இலங்கைக்குப் பயணம் செய்தார்?. அப்போதெல்லாம், ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறாரா?. இலங்கை அதிபரைச் சந்தித்த போதெல்லாம், ‘கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம்’ என்றுச் சொல்லியிருக்கிறாரா?. அப்போதெல்லாம், கச்சத்தீவு மோடியின் ஞாபகத்துக்கு வரவில்லையா?. இப்போது, சீனா பற்றியாவது வாய் திறந்தாரா?. அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்குச் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. 30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீனமொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறது. அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?. இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை. சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில், நீங்கள் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?. பிரதமர் மோடி போடும் நாடகமெல்லாம் இன்னும் சிறிது நாள்களுக்குத்தான் என்பதை எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன். மோடியின் முகத்தில் தோல்வி பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. தேர்தல் நெருங்க, நெருங்க தோல்வி பயத்தில் செய்யக் கூடாததையெல்லாம் செய்கிறார் மோடி’’ என்றார் காட்டமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *