வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கம்பம்,: சபரிமலை கிரீன்பீல்டு விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான, 2,570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, கேரள அரசு முறைப்படி அனுமதி வழங்கியது.

கேரள மாநிலத்தில், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு போன்ற இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அருகில் விமான நிலையம் அமைக்க, மத்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி வழங்கியது.

இருப்பினும், விமான நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள், தேவையான நிலங்கள், சமூக மாற்றங்கள் குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, நிபுணர் குழு, அறிக்கையை அரசிடம் வழங்கியது.

தொடர்ந்து, விமான நிலையம் அமையவுள்ள எருமேலி, மணிமாலா கிராமங்களை சுற்றி, 2,570 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துவக்க, மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஆக., 2024க்குள் நில ஆர்ஜிதம் செய்வதற்கான இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக நில உரிமையாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, நிலம் அளவீட்டு பணிகள் விரைவில் துவங்க உள்ளன.

கம்பத்தில் இருந்து எருமேலி, 100 கி.மீ.,யில் உள்ளது. மேலும், இந்திய அளவில் சபரிமலைக்கு வந்து செல்லும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்களுக்கு விமான நிலையம் பெரிதும் பயனளிக்கும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

-->


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *