Loading

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் எழுத்தாளர் பிரபஞ்சன் 5ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சித்தன்குடி இந்திரஜித் குப்தா பதிப்பகத்தில் நடந்தது.

கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், பேராசிரியர் பஞ்சாங்கம், பேராசிரியர் இளங்கோ, ஆசிரியர் அமரநாதன், தமிழ் சங்க செயலாளர் சீனு மோகன் தாஸ், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க துணை செயலாளர் பச்சையம்மாள் நினைவஞ்சலி உரையாற்றினர்.

இதில், கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் ராதா கிருஷ்ணன், தங்கமணி, சந்திரகுமார், பேராசிரியர்கள் விவேகானந்த தாசன், அன்பு செல்வம், செந்தமிழ், குப்புசாமி, கயல்விழி, ஓவியர் முனிசாமி, சக்தி குருநாதன், தன்னம்பிக்கை கலைக்குழு எலிசபெத், ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவுநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுச் செயலாளர் பால கங்காதரன் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

-->


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *