புதுடில்லி: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் திருத்த சட்ட மசோதா, லோக்சபாவை தொடர்ந்து, ராஜ்யசபாவிலும், நேற்று குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

ஐ.பி.சி., எனப்படும், இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சியங்கள் சட்டம் முறையே 1860, 1898 மற்றும் 1872ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்டன. இந்த மூன்று சட்டங்களையும் இந்த காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதில், சில திருத்தங்களை மேற்கொள்ளும்படி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதை அடுத்து, நிலைக்குழுவின் ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. நிலைக்குழு பல பரிந்துரைகளை அளித்தது.

இதைத் தொடர்ந்து பழைய மசோதா வாபஸ் பெறப்பட்டு, நிலைக்குழு அளித்த பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட மசோதா, நேற்று முன்தினம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ராஜ்யசபாவிலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்கு பின் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து பிரதமர் கூறுகையில், ”இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதன் வாயிலாக, காலனித்துவ நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

Dinamalar iPaper Combo
-->

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *