புதுச்சேரி,: கலை, பண்பாட்டுத்துறை சார்பில் அரவிந்தரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு நாள் தேசிய மாநாடு இன்று துவங்குகிறது.

கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் இன்று மதியம் நடக்கும் மாநாட்டை, கவர்னர் தமிழிசை துவக்கி வைக்கிறார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்குகிறார்.

சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஜெயக்குமார், சாய் சரவணன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இரண்டாம் நாளான நாளை காலை 10:00 மணிக்கு ஆரோவில் பாரத் நிவாசிலும், காமராஜர் மணிமண்டபத்திலும், அரவிந்தரின் புதுச்சேரி வாழ்க்கை, பாரதியாருடன் தொடர்பு மற்றும் அரவிந்தரின் கவிதைகள் பற்றிய கருத்தரங்கம், கவியரங்கம் நடக்கிறது.

தொடர்ந்து, அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படம் ஒளிபரப்பப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

Dinamalar iPaper Combo
-->

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *